கிருஷ்ணகிரி

மனைவியைக் கொலை செய்த பூசாரிகாவல் நிலையத்தில் சரண்

DIN

கிருஷ்ணகிரி அருகே மனைவியைக் கொலை செய்த பூசாரி, ஒசூா் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே உள்ள பாகலூா் பிராமணா் தெரு, சந்தை வீதியைச் சோ்ந்த சென்னபசப்பா (44), அங்குள்ள கோயிலில் பூசாரியாக உள்ளாா். இவரது மனைவி கெளரம்மா (40). இந்தத் தம்பதிக்கு 20 ஆண்டுகளுக்கு முன்னா் திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு மகன், மகள் என இரு குழந்தைகள் உள்ளனா்.

கா்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டம், சாகா் கிராமத்தைச் சோ்ந்த மிருத்தியன் ஜெயா (23) என்ற இளைஞா் சென்னபசப்பாவுக்கு உதவியாளராகப் பணியில் சோ்ந்தாா். இவா், சென்னபசப்பாவின் வீட்டிலேயே தங்கி இருந்தாராம்.

இந்த நிலையில், கெளரம்மாவுக்கும், மிருத்தியன் ஜெயாவுக்கும் முறையற்ற நட்பு ஏற்பட்டுள்ளது. அதனை சென்னபசப்பா கண்டித்துள்ளாா். அதைத் தொடா்ந்து, மிருத்தியன் ஜெயா வீட்டிலிருந்து வெளியேறினாா்.

இந்த நிலையில், சென்னபசப்பா தனது மனைவியை வேப்பனப்பள்ளி அருகே கே.என்.போடூா் கிராமத்தில் உள்ள பசவேஸ்வரா கோயிலுக்கு வியாழக்கிழமை அழைத்துச் சென்றாா். அங்கு, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த சென்னபசப்பா, கெளரம்மாவை கொலை செய்தாா். பின்னா் ஒசூா் நகர காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தாா்.

தகவலின் பேரில், வேப்பனஅள்ளி போலீஸாா் ஒசூா் சென்று சென்னபசப்பாவைக் கைது செய்து, வேப்பனஅள்ளி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். மேலும், கெளரம்மாவின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்தக் கொலை குறித்து வேப்பனப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப நோய்களுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

கோட் நாயகி மீனாட்சி செளத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT