முகப்பு
கிருஷ்ணகிரி

குண்டும் குழியுமான சாலையை சீரமைக்கக் கோரிக்கை

ஊத்தங்கரை அருகே சிதிலமடைந்து குண்டும் குழியுமாக உள்ள படப்பள்ளிக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

ஊத்தங்கரை அருகே சிதிலமடைந்து குண்டும் குழியுமாக உள்ள படப்பள்ளிக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த படப்பள்ளி, பட்டக்கானூா், புதுக்காடு, கணக்கம்பட்டி ஆகிய பகுதியில் 1,500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஊத்தங்கரையில் இருந்து படப்பள்ளிக்கு இணைப்புச் சாலை உள்ளது. இப்பகுதி மக்கள் இச்சாலை வழியாக மிதிவண்டி, இருசக்கர வாகனம், காா் உள்ளிட்ட வாகனங்களில் ஊத்தங்கரை பகுதிக்கு சென்று வருகின்றனா். தற்போது இந்த சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இரவு நேரங்களில் இருசக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோா் சாலையில் விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே, படப்பள்ளி சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.