252 முறை தேர்தலில் போட்டி! ரூ. 1 கோடி டெபாசிட் இழந்த வேட்பாளர்! யார் இவர்?
253வது முறையாக போட்டியிடும் தேர்தல் மன்னன் பத்மராஜன் குறித்து...
தேர்தல் மன்னன் பத்மராஜன் 253வது முறையாக வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் மேட்டூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் போட்டியிடும் தொகுதியில், அவரை எதிர்த்து போட்டியிடப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேட்டூரைச் சேர்ந்த கே. பத்மராஜன், 1988 முதல் தற்போது வரை 252-வது முறை தேர்தல்களில் போட்டியிட்டுத் தோல்வியடைந்து, தேர்தல் மன்னன் என்ற கின்னஸ் சாதனைப் படைத்துள்ளார்
Advertisement
Advertisement
இந்தியாவின் அதிக தோல்விகளைச் சந்தித்த வேட்பாளர் என்ற லிம்கா கின்னஸ் சாதனைப் படைத்துள்ளார்.
மேட்டூர் அருகே குஞ்சாண்டியூரைச் சேர்ந்த பத்மராஜன், டயர் பழுதுபார்க்கும் கடை வைத்துள்ளார். இவர் 1988 முதல் உள்ளாட்சி முதல் குடியரசுத் தேர்தல் வரை 252 முறை போட்டியிட்டு, லிம்கா மற்றும் கின்னஸ் உலக சாதனைப் புத்தகங்களில் இடம் பிடித்துள்ளார்.
இவர் வெற்றியை எதிர்பார்ப்பதில்லை, தேர்தலில் பங்கேற்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு, தோல்வியடைவதில் மகிழ்ச்சி அடைகிறார்.
தொடர்ந்து தோல்வியடைந்தாலும், தனது இறுதி மூச்சு வரை தேர்தலில் போட்டியிடுவேன் என்று அவர் உறுதியாகக் கூறியுள்ளார்.
இந்தியா முழுவதும் இவர் "தேர்தல் மன்னன்" என்றே பிரபலமாக அழைக்கப்படுகிறார்.
இதுவரை குடியரசுத் தலைவர் தேர்தல் முதல் உள்ளாட்சித் தேர்தல் வரை அனைத்திலும் போட்டியிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, மன்மோகன் சிங், வாஜ்பாய், ராகுல் காந்தி என இந்தியாவின் அத்தனை பெரிய தலைவர்களையும் எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஒவ்வொரு முறையும் டெபாசிட் பணத்தை இழந்தே, இதுவரை சுமார் 1 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளதாகத் தெரிவித்தார்
அதிகபட்சமாக 2011-ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் மேட்டூர் தொகுதியில் போட்டியிட்டு 6,273 வாக்குகளைப் பெற்றதே இவரது மிகப்பெரிய சாதனை என்று கூறினார்
Election king Padmarajan is contesting the 253rd Assembly elections from the Mettur constituency.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.