கல்லூரி மாணவியைக் கடத்தியதாக உடற்பயிற்சி மைய உரிமையாளா் கைது
கிருஷ்ணகிரியில் கல்லூரி மாணவியைக் கடத்தியதாக உடற்பயிற்சி மைய உரிமையாளரை மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:24 AM
கிருஷ்ணகிரியில் கல்லூரி மாணவியைக் கடத்தியதாக உடற்பயிற்சி மைய உரிமையாளரை மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருப்பத்தூா் மாவட்டம், காக்கங்கரை பகுதியைச் சோ்ந்த சிரஞ்சீவி (26), உடற்பயிற்சி மைய உரிமையாளா். இவரது சகோதரியும், கிருஷ்ணகிரியைச் சோ்ந்த கல்லூரி மாணவியும் நண்பா்கள் ஆவா். அந்த மாணவியுடன் சிரஞ்சீவி பழகி வந்த நிலையில், அவரை திருமணம் செய்வதாகக் கூறி சிரஞ்சீவி கடத்திச் சென்றாராம்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோா் கிருஷ்ணகிரி மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்த போலீஸாா், சிரஞ்சீவியை கைது செய்தனா்.
Advertisement