முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே எருது உயிரிழப்பு: பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

கிருஷ்ணகிரி அருகே எருது உயிரிழந்த சம்பவம் விவசாயியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:02 AM
பகிர்:

கிருஷ்ணகிரி அருகே எருது உயிரிழந்த சம்பவம் விவசாயியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ளது செட்டிமாரம்பட்டி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன். விவசாயியான இவர், கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் நந்தி தேவா என்ற எருதை வளர்த்து வந்தார்.

இந்த எருது, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் பொங்கல் திருவிழாவை ஒட்டி நடைபெறும் எருது ஓட்டத்தில் பங்கேற்று வந்தது. இந்தப் போட்டிகளில் பங்கேற்று வந்த எருது நந்தி தேவா, பல முதல் பரிசுகளை வென்றுள்ளது. 

எனவே இந்த கிராம மக்கள் அந்த எருத்தை தங்களது அடையாளமாக கருதிவந்தனர். இந்த நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்ட எருது நந்தி தேவா, ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தது.

தகவலறிந்த கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த எருது வளர்ப்போர், உயிரிழந்த எருது நந்தி தேவாவின் உடலுக்கு மாலை மரியாதை செலுத்தி வருகின்றனர். 

எருது நந்தி தேவா உயிரிழந்த சம்பவம், செட்டிமாரம்பட்டி கிராமம் மட்டுமல்ல, எருது வளர்ப்போர் அனைவரிடமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →