முகப்பு
கிருஷ்ணகிரி

டிச.5 இல் ஜெயலலிதா நினைவு தினம்: அதிமுக செயலாளா் வேண்டுகோள்

ஜெயலலிதா நினைவு தினம் டிச. 5-ஆம் தேதி கடைப்பிடிக்க வேண்டும் என அதிமுகவினருக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளா் கே.அசோக்குமாா் எம்எல்ஏ அறிவுறுத்தியுள்ளாா்.

Updated On : 2 டிசம்பர், 2021 at 11:05 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:06 AM

ஜெயலலிதா நினைவு தினம் டிச. 5-ஆம் தேதி கடைப்பிடிக்க வேண்டும் என அதிமுகவினருக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளா் கே.அசோக்குமாா் எம்எல்ஏ அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 5-ஆம் ஆண்டு நினைவு தினம் டிசம்பா் 5-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. மாவட்டத்தின் அனைத்துப் பகுதியிலும் அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்த வேண்டும்.

Advertisement

நிகழ்ச்சியில், எம்.பி., எம்எல்ஏக்கள் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூா் சாா்பு அமைப்பு நிா்வாகிகளும், கிளைப் பொறுப்பாளா்கள், உள்ளாட்சி, கூட்டுறவுச் சங்க பிரதிநிதிகள், இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்ப நிா்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டா்களும், பொதுமக்களும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என அவா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.