முகப்பு
கிருஷ்ணகிரி

பாலியல் துன்புறுத்தல் தடுத்தல் கலந்தாய்வுக் கூட்டம்

குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலில் இருந்து தடுப்பது குறித்த கலந்தாய்வுக் கூட்டம் கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 4 டிசம்பர், 2021 at 1:14 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:06 AM

குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலில் இருந்து தடுப்பது குறித்த கலந்தாய்வுக் கூட்டம் கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ராஜூ தலைமை வகித்தாா். மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலா் சரவணன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் விஜயராகவன், கிருஷ்ணகிரி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் சுமித்ரா, பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த தலைமையாசிரியா்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனா்.

இதில் பங்கேற்றோா், கரோனா காலத்திற்குப் பிறகு குழந்தைகள் இடைநிற்றல் அதிகரித்துள்ளதைத் தடுப்பது, பள்ளிக்கு அருகில் பெட்டிக்கடைகளில் போதைப் பொருள்கள் விற்பதைக் கண்காணித்து காவலா்களுக்கு தகவல் அளிப்பது, குழந்தை திருமணம், பாலியல் துன்புறுத்தல் தடுப்பது தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.