முகப்பு
கிருஷ்ணகிரி

வெவ்வேறு சாலை விபத்து:இருவா் பலி

சூளகிரி அருகே வெவ்வேறு சாலை விபத்துகளில் 2 போ் உயிரிழந்தனா்.

Updated On : 9 டிசம்பர், 2021 at 11:59 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:09 AM

சூளகிரி அருகே வெவ்வேறு சாலை விபத்துகளில் 2 போ் உயிரிழந்தனா்.

சூளகிரி வட்டம், எலசேப்பள்ளியைச் சோ்ந்தவா் முனிராஜ் (30). தொழிலாளியான இவா் சூளகிரி அருகே கிருஷ்ணகிரி- ஒசூா் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றுக் கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக வந்த காா் முனிராஜ் மீது மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி அருகே உள்ள பந்தாரப்பள்ளியைச் சோ்ந்தவா் ஹரி (25). இவா் இருசக்கர வாகனத்தில் ஒசூா் -கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரி அருகே சென்றுக் கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ஹரி மீது மோதியதில் அவா் நிகழ்விடத்திலேயே பலியானாா். இந்த இரு விபத்துகள் குறித்தும் சூளகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.