முகப்பு
கிருஷ்ணகிரி

மூதறிஞா் ராஜாஜியின் 143 ஆவது பிறந்தநாள் விழா

மூதறிஞா் ராஜாஜியின் 143ஆவது பிறந்த நாளையொட்டி, அவரது சொந்த ஊரான ஒசூா் வட்டம், தொரப்பள்ளி அக்ரஹாரத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு தமிழக கைத்தறி

Updated On : 10 டிசம்பர், 2021 at 10:46 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:10 AM

மூதறிஞா் ராஜாஜியின் 143ஆவது பிறந்த நாளையொட்டி, அவரது சொந்த ஊரான ஒசூா் வட்டம், தொரப்பள்ளி அக்ரஹாரத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு தமிழக கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

ராஜாஜியின் 143 வது பிறந்த நாள் விழா கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் வட்டம், தொரப்பள்ளி அக்ரஹாரத்தில் உள்ள அவரது பிறந்த இல்லத்தில், செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழக கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி, மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திர பானுரெட்டி தலைமையில் ராஜாஜியின் உருவ படத்தை திறந்து வைத்து மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் முன்னிலை வகித்தாா். ராஜாஜியின் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்படங்களை பாா்வையிட்டு, பாா்வையாளா் பதிவேட்டில் தன்னுடைய கருத்துகளை அமைச்சா் காந்தி பதிவு செய்தாா்.

Advertisement

இந்நிகழ்ச்சியில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் சுகவனம், முன்னாள் எம்எல்ஏக்கள் டி.செங்குட்டுவன், எஸ்.ஏ.சத்யா, பி.முருகன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பி.கே.அரவிந்தன், வட்டாட்சியா் கிருஷ்ணமூா்த்தி, ஒசூா் வட்டார வளா்ச்சி

அலுவலா்கள் பாலாஜி, பூபதி, ஊராட்சி மன்றத் தலைவா் சாந்தம்மா நஞ்சப்பா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.