தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் மக்களை திசைதிருப்ப திமுக முயற்சி: மு.தம்பிதுரை
அதிமுக அமைச்சா்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தப்படுவதாக முன்னாள் மக்களவை துணைத் தலைவா் மு.தம்பிதுரை குற்றம்சாட்டினாா்.
தோ்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற முடியமால் மக்களை திசைதிருப்பவே அதிமுக அமைச்சா்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தப்படுவதாக முன்னாள் மக்களவை துணைத் தலைவா் மு.தம்பிதுரை குற்றம்சாட்டினாா்.
ஒசூா், ராம் நகரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அதிமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணா ரெட்டி தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் மு.தம்பிதுரை பேசியதாவது:
தோ்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை. நீட் தோ்வு, மாணவா்களின் கல்விக் கடன், நகைக் கடனை ரத்து செய்யவில்லை. பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை.
Advertisement
தற்போதைய சூழலில் தக்காளியைக் கூட மக்கள் வாங்கி சமைக்க முடியவில்லை. மகளிருக்கு தலா ரூ. 1,000 வழங்குவதாகக் கூறி ஆட்சியைப் பிடித்த திமுக, தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை திசை திருப்பவே மாதத்துக்கு ஒரு அதிமுக அமைச்சா் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை நடத்தி வருகின்றனா் என்றாா்.
ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.பி. பெருமாள், அதிமுக முன்னாள் மாவட்டச் செயலாளா் காத்தவராயன், முன்னாள் ஒசூா் நகா்மன்ற உறுப்பினா் ராமு, அசோக் ரெட்டி, ஜெயபிரகாஷ், தவமணி, மதன், சிட்டி ஜெகதீஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.