கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

DIN

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து இடது மற்றும் வலது புற பிரதான கால்வாய்களில் நிகழ்வானது இரண்டாம் போகபாசனத்திற்காக தண்ணீரை மாவட்ட ஆட்சியர் வி.ஜெயச்சந்திர பானு ரெட்டி திறந்து வைத்தார்.

இதன்படி 9,012 ஏக்கர் பரப்பளவு விளைநிலங்கள் பயன்பெறும் வகையில் 28.04. 2022. வரை 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து வலதுபுற கால்வாய் மூலம்  வினாடிக்கு 87 கன அடியும், இடது புற கால்வாய் மூலம் வினாடிக்கு 93 கன அடி வீதமும் ஆக மொத்தம் விநாடிக்கு 150 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 

இதன்படி கிருஷ்ணகிரி வட்டத்தில் உள்ள பெரிய முத்தூர், தளி அள்ளி, எர்ரஅள்ளி, மாரிசெட்டிஅள்ளி, சுண்டே குப்பம்,  கால்வே அள்ளி,  பெண்ணேஸ்வரமடம், நாகோஜனஅள்ளி, திம்மாபுரம், குண்டலபட்டி,  காவேரிப்பட்டிணம் , ஜனப்பரஅள்ளி, செனட்டஅள்ளி, மிட்ட அள்ளி,  பாலேகுளி,  பையூர் ஆகிய 16 ஊராட்சிகளில் உள்ள நஞ்சை நிலங்கள் பாசன வசதி பெறும்.

விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டுமென விவசாயிகளை மாவட்ட ஆட்சியர்  கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் குமார்,  கிருஷ்ணகிரி  கிழக்கு மாவட்ட  திமுக பொறுப்பாளர் டி செங்குட்டுவன் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT