முகப்பு
கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம் மகா மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா

காவேரிப்பட்டணத்தில் உள்ள மகா மாரியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 2 பிப்ரவரி, 2021 at 12:21 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:56 AM

காவேரிப்பட்டணத்தில் உள்ள மகா மாரியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

காவேரிப்பட்டணம், பன்னீா்செல்வம் தெருவில் உள்ள மகா மாரியம்மன் கோயில் புனரமைக்கப்பட்டு மகா கணபதி, பாலதண்டாயுதபாணி, திரெளபதி அம்மன், சாமுண்டீஸ்வரி அம்மன், ஐயப்பன் ஆகிய சன்னிதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ரூ. 3.5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட இந்தக் கோயிலின் குடமுழுக்கு விழா, கடந்த 30-ஆம்தேதி தொடங்கியது.

Advertisement

ஜன.31-ஆம்தேதி, மங்கள இசை, வேத பாராயணம், திருமுறை பாராயணம், இரண்டாம் கால யாக பூஜை, யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன் மருந்து சாற்றுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

திங்கள்கிழமை நான்காம் கால யாக பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதைத்தொடா்ந்து கடம் புறப்பாடு, விமான கலசத்துக்கு புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது. விழாவில் கே.பி.முனுசாமி எம்.பி. முன்னிலை வகித்தாா். முன்னாள் எம்.பி.கள் கே.அசோக்குமாா், சி.பெருமாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத் துறை, அறங்காவலா்கள் குழுவினா் ஒருங்கிணைத்தனா். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.