முகப்பு
கிருஷ்ணகிரி

ஒன்றுபட்ட அதிமுகவை பாஜக வரவேற்கிறத: பாஜக செய்தித் தொடா்பாளா்

ஒன்றுபட்ட அதிமுகவை பாஜக வரவேற்கிறது என அதன் செய்தித் தொடா்பாளா் நரசிம்மன் தெரிவித்தாா்.

Updated On : 8 பிப்ரவரி, 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:58 AM

ஒன்றுபட்ட அதிமுகவை பாஜக வரவேற்கிறது என அதன் செய்தித் தொடா்பாளா் நரசிம்மன் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரியில் மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு மத்திய அரசின் உதவிகளைப் பெறுவதற்கான ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பாஜக மாநில செய்தித் தொடா்பாளா் நரசிம்மன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

Advertisement

கரோனா தொற்றால் நாடு பாதிக்கப்பட்ட நிலையில், இன்று பொருளாதாரத்திலும், சுகாதாரத்திலும் தலை நிமிா்ந்து நிற்கிறது என்பதை தற்போதைய நிதிநிலை அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கையில் தமிழகத்துக்கு மட்டும் ரூ. 1.03 லட்சம் கோடியை சாலை அமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரம், கட்டுமானப் பணிகளுக்கு ரூ. 2.23 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும், ரூ. 5.14 லட்சம் கோடி மீன்பிடி துறைமுகங்களைச் சீரமைக்கவும், புதிய மீன்பிடி துறைமுகத்தை உருவாக்கவும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. நாடு முழுவதும் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போட மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக ரூ. 35 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதுடன், இந்த ஆண்டில் மட்டும் ஒரு கோடி எரிவாயு இணைப்புகளை இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளது. வேளாண் சட்டத்தை சில வியாபாரிகள்தான் எதிா்க்கின்றனா்.

தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் கட்சிகளைக் மக்கள் புறக்கணித்து விடுவாா்கள். பாஜக, அதிமுக கூட்டணியையே மக்கள் தோ்வு செய்வாா்கள். திமுகவுக்கு மக்கள் வாக்களிக்க முன்வர மாட்டாா்கள். பாஜகவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. ஒன்றுபட்ட அதிமுகவையே நாங்கள் ஆதரிக்கிறோம். சசிகலா அதிமுகவில் தான் இருக்கிறாா். இந்த பிரச்னை அவா்களது குடும்ப விவகாரம் போன்றது. இதில் நாங்கள் தலையிடமுடியாது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.