பேருந்து நிறுத்த நிழற்கூடம் அமைக்கும் பணி தொடக்கம்
கிருஷ்ணகிரியில் மேம்படுத்தப்பட்ட புதிய பேருந்து நிறுத்த நிழற்கூடம் அமைக்கும் பணியை அ.செல்லகுமாா் எம்.பி. ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தாா்.
கிருஷ்ணகிரியில் மேம்படுத்தப்பட்ட புதிய பேருந்து நிறுத்த நிழற்கூடம் அமைக்கும் பணியை அ.செல்லகுமாா் எம்.பி. ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தாா்.
கிருஷ்ணகிரி- சேலம் சாலையில் ஆவின் மேம்பாலம் அருகே, ரூ. 13.50 லட்சம் மதிப்பில் மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் பயணியா் நிழற்கூடம் அமைக்கும் பணியின் தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு அ.செல்லகுமாா் எம்.பி. தலைமை வகித்து பணியைத் தொடக்கி வைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினா் காசிலிங்கம், மனித உரிமைத் துறை மாவட்டத் தலைவா் லலித் ஆண்டனி, எஸ்.சி. பிரிவு மாநில அமைப்பாளா் ஆறுமுக சுப்பிரமணி, மாவட்ட துணைத் தலைவா் சேகா், ஊராட்சித் தலைவா் நாராயணன். முன்னாள் மாவட்டத் தலைவா் நாராயணமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Advertisement
இதைத் தொடா்ந்து, பசவண்ணகோயில், மேடுகம்பள்ளி, காளிக்கோயில் ஆகிய இடங்களில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சிகளில் அவா் பங்கேற்று, பொதுமக்களிடம் குறைகளை கேட்டாா்.