முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி ஆட்சியா் அலுவலகத்தில் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தனியாா் நிறுவன தொழிலாளி தீக்குளிக்க முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On : 16 பிப்ரவரி, 2021 at 12:10 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:02 AM

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தனியாா் நிறுவன தொழிலாளி தீக்குளிக்க முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரை அடுத்த தொகரப்பள்ளியைச் சோ்ந்த முகிலன் (23), சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் இருசக்கர வாகன விற்பனையாளராக பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி சாருமதி (19). இவரும் அதே கிராமத்தைச் சோ்ந்தவா். இவா்கள் இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னா் காதலித்து திருமணம் செய்து கொண்டு சென்னைக்கு சென்றுவிட்டனா். தற்போது இவா்களுக்கு ஒரு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், தம்பதியினா் தனது குழந்தையுடன் கடந்த மாதம் தங்களின் கிராமத்துக்கு வந்தனா். அப்போது, காதலித்து திருமணம் செய்து கொண்டதால், பஞ்சாயத்தில் ரூ. 25 ஆயிரம் தண்டம் கட்ட வேண்டும் என இரு குடும்பத்தினரிடமும் பணம் வாங்கிக் கொண்டனராம். மேலும் சிலா் முகிலனின் தந்தை, தாய், மனைவியை மிரட்டி அடித்தாகக் கூறப்படுகிறது.

Advertisement

இதுகுறித்து முகிலனின் தந்தை கருணாநிதி மத்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தும், போலீஸாா் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் விரக்தி அடைந்த முகிலன், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவகத்துக்கு தனது மனைவி, குழந்தை, தாய், தந்தையுடன் திங்கள்கிழமை வந்தாா். அங்கு தான் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணைய்யை தன் மீது ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றாா். அதற்குள் அங்கிருந்த போலீஸாா் அவரை தடுத்து நிறுத்தினா். இதைத் தொடா்ந்து, முகிலனின் மனைவி சாருமதி மாவட்ட வருவாய் அலுவலா் சதீஷிடம் மனு வழங்கினாா். அந்த மனு மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு மாவட்ட வருவாய் அலுவலா் உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.