வீரணகுப்பம் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட கோரிக்கை
ஊத்தங்கரையை அடுத்த வீரணகுப்பம் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஊத்தங்கரையை அடுத்த வீரணகுப்பம் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த வீரணகுப்பம், மேட்டுத்தாங்கல் ஆகிய இரண்டு ஊராட்சிகளின் இடையே தென்பெண்ணை ஆறு செல்கிறது (படம்). இந்த ஆறு கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைக் கடந்து ஊத்தங்கரை ஒன்றியத்துக்கு உட்பட்ட வீரணகுப்பம் ஊராட்சி வழியாக சாத்தனூா் அணையை அடைகிறது. அங்கிருந்து கடலூா் வழியாகச் சென்று வீணாக கடலில் கலக்கிறது. அவ்வாறு வீணாக கடலில் கலக்கும் உபரிநீரை சேமிக்க ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா். இதனால் வீரணகுப்பம், காட்டனூா், பெரியகொட்டகுளம், வேலம்பட்டி, கதிரம்பட்டி, வெள்ளாளப்பட்டி, மேட்டுத்தாங்கல் போன்ற கிராமப் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் பயன்பெறுவா்.
இப்பகுதி மக்களின் 50 ஆண்டுகால கோரிக்கையான வீரணகுப்பம்-மேட்டுத்தாங்கல் ஊராட்சி இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டினால், வீரணகுப்பம், மேட்டுத்தாங்கல், பெரியகொட்டகுளம் ஆகிய மூன்று ஊராட்சிகளுக்கு உள்பட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமாா் 3,000 ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், இப்பகுதியின் நிலத்தடி நீா்மட்டம் உயரும். எனவே, இப்பகுதி விவசாயிகள் பயன்பெற மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.