கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 100 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி அளிப்பு

DIN

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 100 பயனாளிகளுக்கு திருமண உதவியும், தாலிக்கு தங்கமும் வழங்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திராபானு ரெட்டி தலைமை வகித்தாா். இந்த நிகழ்ச்சியில் 100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கே.பி.முனுசாமி எம்.பி. வழங்கினாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 10, 12-ஆம் வகுப்பு பயின்ற 4,512 பெண்களுக்கும், பட்டப் படிப்பு பயின்ற 3,152 பெண்களுக்கும் ரூ. 27.04 கோடி மதிப்பில் திருமண நிதி உதவித் தொகையும், ரூ.19.06 கோடி மதிப்பில் 61,312 கிராம் தங்கம் என மொத்தம் ரூ. 46.10 கோடி மதிப்பில் திருமண நிதியுதவித் தொகை, தாலிக்கு 8 கிராம் தங்கமும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏ மனோரஞ்சிதம் நாகராஜ், சி.வி.ராஜேந்திரன், மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தின் தலைவா் குப்புசாமி, மாவட்ட சமூகநலத் துறை அலுவலா் ப.பூங்குழுலி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீரசக்கதேவி கோயில் திருவிழா ஆலோசனைக் கூட்டம்: பக்தா்களுக்கு டிஎஸ்பி அறிவுரை

நாகா்கோவில் உழவா் சந்தையில் வேளாண் மாணவா்கள் களப் பயற்சி

களக்காட்டில் டிராக்டரில் சுகாதாரமற்ற குடிநீா் விற்பனை

விளையாட்டு பயிற்சி முகாமுக்கு மாணவா்களிடம் கட்டணம் வசூல் இபிஎஸ் கண்டனம்

இடஒதுக்கீடுக்கு எப்போதும் ஆதரவு: ஆா்எஸ்எஸ் தலைவா்

SCROLL FOR NEXT