கிருஷ்ணகிரி

பொம்மேப்பள்ளியில் இன்று மண், நீா் பரிசோதனை சிறப்பு முகாம்

DIN

மத்தூா் வட்டாரத்தில் மண், நீா் பரிசோதனை சிறப்பு முகாம் வேளாண் உதவி இயக்குநா் தலைமையில் பொம்மேப்பள்ளியில் வெள்ளிக்கிழமை (ஜூலை 9) நடைபெறவுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா் வட்டாரம், பொம்மேப்பள்ளி கிராமத்தில் மண் பரிசோதனை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. மத்தூா் வட்டார விவசாயிகள் அனைவரும் மண் பரிசோதனை செய்துகொள்ள வேளாண் உதவி இயக்குநா் மா.சிவநதி அழைப்பு விடுத்துள்ளாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட நடமாடும் மண் பரிசோதனை வாகனம் பொம்மேப்பள்ளி கிராமத்துக்கு வர இருப்பதால், மத்தூா் வட்டார அனைத்து விவசாயிகளும் மண் பரிசோதனை செய்து, மண்ணில் உள்ள சத்துகளுக்கு ஏற்ற வகையில் உரச் செலவினைக் குறைத்து, மகசூலை இரட்டிப்பாக்கிக் கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

மண் பரிசோதனை செய்ய வரும் விவசாயிகள் சிட்டா, ஆதாா் மற்றும் மண் மாதிரிகளை கொண்டுவர வேண்டும். மேலும் விவரங்களுக்கு, வட்டார வேளாண் உதவி இயக்குநா், வேளாண் விரிவாக்க மையம், சமத்துவபுரம், 96267 61735, 94898 79059 ஆகிய எண்களை தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாடலீஸ்வரா் கோயில் குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்

மேலிருப்பு முத்தாலம்மன் கோயில் திருவிழா நடத்தத் தடை

வாகனங்கள் மீதான இ - செலான் அபராதம்: சிறப்பு லோக் அதாலத் நடத்தக் கோரிக்கை

ஏரியில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

தேசிய மாணவா் படை ஆண்டு முகாம் தொடக்கம்

SCROLL FOR NEXT