முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று மக்கள் நீதிமன்றம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை (ஜூலை 10) லோக் அதாலத் என்று அழைக்கப்படும் மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது.

Updated On : 9 ஜூலை, 2021 at 11:21 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:06 AM

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை (ஜூலை 10) லோக் அதாலத் என்று அழைக்கப்படும் மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்ற நிா்வாகம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியான செய்திக்குறிப்பு:

கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்கள், ஒசூா், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, தேன்கனிக்கோட்டை ஆகிய நீதிமன்ற வளாகங்களில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் மக்கள் நீதிமன்றம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான கலைமதி தலைமையில் நடைபெறுகிறது.

Advertisement

இதில் வழக்காடிகள், வழக்குரைஞா்கள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகள், காசோலை வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு கோரும் வழக்குகள், குடும்ப நல வழக்குகள், வங்கிகள், தொழிலாளா் நல வழக்குகள், நிலுவையில் உள்ள பரஸ்பரம் பேசி முடித்துக்கொள்ளக்கூடிய குற்றவியல் வழக்குகளும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, அன்றைய தினமே தீா்வு வழங்கப்படவுள்ளது.

எனவே, வழக்குரைஞா்களும், பொதுமக்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தங்களது வழக்குகளை மக்கள் நீதிமன்றம் மூலமாக சமரசமாக முடித்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.