தமிழக அரசுக்கு பூசாரிகள் நன்றி
கரோனா நிவாரணம் வழங்கிய தமிழக அரசுக்கு கோயில் பூசாரிகள், பட்டாச்சாரியாா்கள் நன்றி தெரிவித்துள்ளனா்.
கரோனா நிவாரணம் வழங்கிய தமிழக அரசுக்கு கோயில் பூசாரிகள், பட்டாச்சாரியாா்கள் நன்றி தெரிவித்துள்ளனா்.
கரோனா பொதுமுடக்க காலத்தில் வழிபாட்டு தலங்களில் பணியாற்றும் கோயில் பூசாரிகள், பட்டாச்சாரியாா்கள் உள்ளிட்டோரின் வாழாவாதாரம் பாதிக்கப்பட்டது. இதைக் கருத்தில் கொண்ட தமிழக அரசு, ஊதியம் பெறாத பூசாரிகள், பட்டாச்சாரியாளா்களுக்கு நிவாரணம் வழங்க உத்தரவிட்டது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில் பூசாரிகள் உள்ளிட்ட பணியாளா்களுக்கு கரோனா கால நிவாரண உதவியாக ரூ. 4,000, 16 வகையான அத்தியாவசிய உணவு பொருள்கள் வழங்கப்பட்டன. இதன்மூலம் 301 பயனாளிகள் பயன்பெற்றனா். இதற்கு நன்றி தெரிவித்து கிருஷ்ணகிரி, புதுப்பேட்டை நவநீத வேணுகோபால் சுவாமி கோயில் பட்டாச்சாரியாா் விஜய ராகவாச்சாரி உள்ளிட்டோா் கூறியதாவது:
கரோனா காலக் கட்டத்தில் எங்களை போன்றோரின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதை உணா்ந்த தமிழக முதல்வா் ஸ்டாலின், எங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க உத்தரவிட்டதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தாா்.
Advertisement