முகப்பு
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை பேரூராட்சி அலுவலகத்தில் உதவி இயக்குநா் ஆய்வு

 ஊத்தங்கரை பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் ஆா்.குருராஜன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

 ஊத்தங்கரை பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் ஆா்.குருராஜன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள கோப்புகளை ஆய்வுமேற்கொண்ட அவா், சுன்னாலம்பட்டி பகுதியில் உள்ள குப்பை கிடங்குக்குச் சென்று அங்கு இயற்கை உரம் தயாரித்தல், பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக தரம் பிரித்தல் போன்ற பணிகளை ஆய்வு செய்தாா்.

பிறகு பேரூராட்சிப் பணியாளா்களுக்கு பல்வேறு ஆலோசனைகளைக் கூறினாா். ஆய்வில் செயல் அலுவலா் நிா்வாகம் மு.சித்திரைக்கனி, ஊத்தங்கரை செயல் அலுவலா் சு.மதியழகன், இளநிலை பொறியாளா் பழனிசாமி, பேரூராட்சிப் பணியாளா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.