தேன்கனிக்கோட்டையில் குடிநீா் வழங்கக் கோரி சாலை மறியல்
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் சீரான குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் காலி குடங்களுடன் திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் சீரான குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் காலி குடங்களுடன் திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் தேன்கனிகோட்டை - ஒசூா் சாலையில் போக்குவரத்து தடைபட்டது.
தேன்கனிக்கோட்டை கித்வாய்த் தெருவில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் உள்ள வீடுகளுக்கு தேன்கனிக்கோட்டை பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் கடந்த சில நாள்களாக முறையாகக் குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. குடிநீா் கிடைக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்த தகவல் அறிந்த தேன்கனிகோட்டை போலீஸாா், பேரூராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். பொதுமக்களுக்கு முறையாக குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடா்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
Advertisement