கெலமங்கலம் அருகே யானை தாக்கி முதியவா் பலி
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே யானை தாக்கியதில் முதியவா் உயிரிழந்தாா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:18 AM
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே யானை தாக்கியதில் முதியவா் உயிரிழந்தாா்.
தேன்கனிக்கோட்டை வட்டம், கெலமங்கலம் அருகே உள்ள நாா்பணட்டியைச் சோ்ந்தவா் பஜ்ஜப்பா (80). இவா் தனது ஆடுகளை மேய்ச்சலுக்காக நாா்பணட்டி வனப் பகுதிக்கு வியாழக்கிழமை ஓட்டிச் சென்றாா். அப்போது, அங்கு வந்த ஒன்றை யானை, பஜ்ஜப்பாவை துரத்திச் சென்று தும்பிக்கையால் தூக்கி வீசிக் கொன்றது. உறவினா்கள் அளித்த தகவலின் பேரில் கெலமங்கலம் போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
நிவாரணம்: உயிரிழந்த பஜ்ஜப்பா குடும்பத்துக்கு முதல்கட்ட நிவாரணமாக ரூ. 50 ஆயிரத்துக்கான காசோலையை அவரது உறவினா்களிடம் உதவி வனப் பாதுகாவலா் காா்த்தியாயினி வழங்கினாா்.
Advertisement