முகப்பு
கிருஷ்ணகிரி

அனைத்து வயதினருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்த வேண்டும்

அனைத்து வயதினருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்த வேண்டும் என குடியரசுத் தலைவருக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் மூலம் அளித்த மனுவில் அ.செல்லக்குமாா் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 5 ஜூன், 2021 at 12:20 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:52 AM

அனைத்து வயதினருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்த வேண்டும் என குடியரசுத் தலைவருக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் மூலம் அளித்த மனுவில் அ.செல்லக்குமாா் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டியிடம் வெள்ளிக்கிழமை அளித்த மனு விவரம்:

கரோனா தடுப்பூசி செலுத்துவதில் மத்திய அரசு முறையாக திட்டமிடாததால், கரோனா தொற்றால் பல ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். பல்வேறு நாடுகள் கடந்த 2020 மே மாதத்தில் தடுப்பூசிகள் கொள்முதல் செய்ய முயற்சி எடுத்த போது, மத்திய அரசு அலட்சியமாக இருந்தது. நிகழாண்டு ஜனவரில் மத்திய அரசு தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கிய போது, சுய விளம்பரத்துக்காக 6.5 கோடி தடுப்பூசிகளை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது. அந்த தடுப்பூசியை இந்திய மக்களுக்கு செலுத்தி இருந்தால், கரோனா தொற்றால் மக்கள் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டு இருக்காது.

Advertisement

மத்திய அரசு கூறுவது போல் நாள் ஒன்றுக்கு 16 லட்சம் தடுப்பூசி செலுத்துவதன் மூலம் இன்னும் 3 ஆண்டுகள் ஆனாலும் இந்தப் பணி நிறைவேறாது.

கரோனா 3-ஆவது அலை மிக விரைவில் வரும் என மருத்துவ நிபுணா் குழுவினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா். இதனால் அனைத்து வயதுடையவா்களுக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்த வேண்டும் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.