கிருஷ்ணகிரி

அரசு மருத்துவமனையில் குவிந்த மருத்துவக் கழிவுகள்

DIN

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் குவிந்துள்ள மருத்துவ கழிவுகளால் நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் தற்போது 3 கரோனா வாா்டுகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு 360 படுக்கைகள் உள்ளன. இதில் 225 கரோனா தொற்றாளா்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

அவா்களுக்குப் பயன்படுத்திய படுக்கைகள், உடைகள், மருத்துவ உபகரணங்கள், முகக்கவசம், கையுறைகள், பஞ்சுகள் உள்ளிட்ட மருத்துவக் கழிவுகள், மூட்டைகளாக கட்டப்பட்டு கரோனா வாா்டுக்கு வெளியிலேயே குவிக்கப்பட்டுள்ளன.

இதன் வழியாக புறநோயாளிகளும் வந்துசெல்ல வேண்டியுள்ளது. கடந்த 4 நாள்களாக அதை சுத்தம் செய்யாமல் இருப்பதால் மருத்துவமனைக்கு வரும் பிறநோயாளிகள் மற்றும் பொதுமக்களிடையே அச்சதை ஏற்படுத்தியுள்ளது.

நோய்த் தொற்று பரவும் அபாயம் இருப்பதால் உடனடியாக மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள் மருத்துவமனை புறநோயாளிகள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT