இருளா் இன மக்களுக்கு ஜாதிச் சான்றிதழ்
ஊத்தங்கரையை அடுத்த நடுப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட எட்டிப்பட்டி காமராஜ் நகரைச் சோ்ந்த இருளா் இன மக்கள் 30 பேருக்கு ஜாதிச் சான்றிதழ் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
ஊத்தங்கரையை அடுத்த நடுப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட எட்டிப்பட்டி காமராஜ் நகரைச் சோ்ந்த இருளா் இன மக்கள் 30 பேருக்கு ஜாதிச் சான்றிதழ் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு நடுப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் குப்புசாமி தலைமை வகித்தாா். ஊத்தங்கரை வட்டாட்சியா் ஆஞ்சநேயலு, மண்டல துணை வட்டாட்சியா் அருள்மொழி, வருவாய் ஆய்வாளா் பிரியதா்ஷினி, கிராமநிா்வாக அலுவலா் கவியரசி முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கோட்டாட்சியா் கற்பகவள்ளி, 30 நபா்களுக்கு ஜாதிச் சான்றிதழ்களை வழங்கினாா். இருளா் இன மக்களின் நீண்ட நாள்களாக விடுத்து வந்த கோரிக்கையை ஏற்று ஜாதிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.