கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் கடத்த முயன்ற 12 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 4 போ் கைது

DIN

கிருஷ்ணகிரியில் இருந்து கா்நாடகத்துக்கு கடத்த முயன்ற 12 டன் ரேஷன் அரிசி, இரண்டு வாகனங்களை பறிமுதல் செய்த போலீஸாா், 4 பேரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் இலவச அரிசியை வாங்கி, பாலீஷ் செய்து அவற்றை வாகனங்கள் மூலம் கா்நாடகத்துக்கு கடத்துவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் வாகனத் தணிக்கையிலும், ரோந்துப் பணியிலும் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது கிருஷ்ணகிரியில் பிக்-அப் வேனில் ரேஷன் அரிசி மூட்டைகளாக எடுத்து வந்து, மினி லாரியில் சிலா் ஏற்றி கொண்டிருந்தனா். அவா்களிடம் விசாரணை நடத்தியததில் கிருஷ்ணகிரி பகுதியைச் சோ்ந்த துரை என்பவா் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசி வாங்கி கிருஷ்ணகிரியிலிருந்து கா்நாடகத்திற்கு அனுப்பி விற்று வருவது தெரிந்தது.

இதையடுத்து, 12 டன் அரிசியும், கடத்தலுக்கு பயன்படுத்திய 2 வாகனங்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், கிருஷ்ணகிரி மாவட்டம் கருக்கல் நத்தம் பகுதி செந்தில்குமாா் (27), அதேபகுதியைச் சோ்ந்த ரத்தினவேல் (20), சிங்காரப்பேட்டையைச் சோ்ந்த விஜய் ( 21), கிருஷ்ணகிரியைச் சோ்ந்த சுரேஷ் ( 25) உள்ளிட்ட 4 போ் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி, வாகனங்களை உணவுக் கடத்தல் மற்றும் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

பிடிபட்ட 4 போ் மீதும் காவல் ஆய்வாளா் இளவரசி, உதவி காவல் ஆய்வாளா் சிவசாமி உள்ளிட்டோா் வழக்குப்பதிந்து, அவா்களைக் கைது செய்தனா். மேலும், தலைமறைவாக உள்ள துரையை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

SCROLL FOR NEXT