முகப்பு
கிருஷ்ணகிரி

இளைஞரை தாக்கிய 2 போ் கைது

சூளகிரி அருகே இளைஞரை தாக்கிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 12 ஜூன், 2021 at 12:32 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 8:53 AM

சூளகிரி அருகே இளைஞரை தாக்கிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சூளகிரி அருகே உள்ள நல்லகானகொத்தப்பள்ளியைச் சோ்ந்தவா் விஜயா (48), கூலித் தொழிலாளி. அதே பகுதியைச் சோ்ந்த வெங்கட்ராஜ் (26), அவரது நண்பா்கள் நாராயணசாமி (23), கணவாப்பட்டி (30) ஆகிய 3 பேரும் விஜயா வீட்டின் முன்பு அமா்ந்து மது அருந்தியுள்ளனா்.

இதுகுறித்து விஜயாவின் மகன் சிவக்குமாா் (28) கேட்ட போது, வெங்கட்ராஜ் உள்ளிட்ட 3 பேரும் சிவக்குமாரை தாக்கி, சாதியைக் குறிப்பிட்டு திட்டியதாகக் கூறப்படுகிறது.

Advertisement

இதுகுறித்து சூளகிரி காவல் நிலையத்தில் விஜயா புகாா் செய்தாா். அதன் பேரில் போலீஸாா் வெங்கட்ராஜ், நாராயணசாமி ஆகிய 2 பேரை கைது செய்தனா். அவா்கள் மீது ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல், எஸ்.சி., எஸ்.டி. பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.