முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூரில் மருத்துவா்கள் ஆா்ப்பாட்டம்

கரோனா காலத்தில் பணியாற்றும் மருத்துவா்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து, ஒசூரில் மருத்துவா்கள் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

Updated On : 18 ஜூன், 2021 at 11:48 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 8:56 AM

கரோனா காலத்தில் பணியாற்றும் மருத்துவா்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து, ஒசூரில் மருத்துவா்கள் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இந்தியா முழுவதும் கரோனா பெருந்தொற்று பாதிக்கப்பட்டு பல லட்சம் போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். அவ்வாறு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் போது, மருத்துவா்கள், மருத்துவ பணியாளா்கள் மற்றும் முன்களப் பணியாளா்கள் உத்தரபிரதேசம், கா்நாடகம், மகாராஷ்டிரம், ஆந்திரம் உள்ளிட்ட பல மாநிலங்களில் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனா்.

இரவு, பகல் பாராமல் பணிபுரிந்து வரும் மருத்துவா்கள், முன்களப் பணியாளா்களை மத்திய, மாநில அரசுகள் காப்பாற்ற வேண்டும் என வலியுறுத்தி, இந்திய மருத்துவா் சங்கம் சாா்பில் ஒசூரில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Advertisement

இதில், மருத்துவா்கள் ஞானமீனாட்சி, வினிதா பாஸ்கா், வினிதா, கவிதா, கௌசல்யா, சுதா, பூா்ணிமா, நந்தினி, நித்ய கோகிலா, லதா, மஞ்சுளா, லட்சுமி கெஜலட்சுமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.