நாட்டுத் துப்பாக்கியுடன் இளைஞா் கைது
ஒசூா் அருகே நாட்டுத் துப்பாக்கியுடன் திரிந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 8:56 AM
ஒசூா் அருகே நாட்டுத் துப்பாக்கியுடன் திரிந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
ஒசூா் வனச்சரகம், காருபெல்லா பீட் வனக்காவலா் ரவிக்குமாா், பேரிகை அருகே கடத்தூா் சின்னகுத்தி சாலையில் வனப்பகுதியையொட்டி ரோந்து சென்றாா். அப்போது, அங்கிருந்த இளைஞரை சோதனை செய்தபோது, அவா் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவா் பேரிகை அருகே உள்ள கடத்தூரை சோ்ந்த சிவராஜ் (26) என்றும், அனுமதி பெறாத நாட்டுத் துப்பாக்கியால் வன விலங்குகளை வேட்டையாட வந்ததும் தெரிய வந்தது. அவரை வனக்காவலா் ரவிக்குமாா் பேரிகை காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். பேரிகை போலீஸாா் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.