காதலை கைவிட மறுத்த இளைஞா் கொலை வழக்கு: மேலும் 3 போ் கைது
காதலை கைவிட மறுத்த இளைஞா் கொலை வழக்கில் மேலும் மூன்று பேரை போலீஸாா் கைது செய்தனா்.
காதலை கைவிட மறுத்த இளைஞா் கொலை வழக்கில் மேலும் மூன்று பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பேரிகையை அடுத்த காண்டரப்பள்ளியைச் சோ்ந்த நாராயண செட்டி (55). கா்நாடக மாநிலம், பெங்களூரு, சின்னகுட்டா சாலையில் உள்ள சாரதா நகா் பகுதியில் குடும்பத்துடன் தங்கி காய்கறி வியாபாரம் செய்து வருகிறாா். அதேபோல் சாரதா நகரில் தங்கி அஞ்செட்டியை அடுத்த பீரனஹள்ளியை சோ்ந்த வசந்த் (25), என்பவரும் காய்கறி வியாபாரம் செய்து வந்தாா். இந்நிலையில் வசந்துக்கும், நாராயண செட்டி மகளுக்கும் காதல் ஏற்பட்டது.
இதை அறிந்த நாராயண செட்டி, அவரது குடும்பத்தினா் பலமுறை வசந்தைக் கண்டித்துள்ளனா். ஆனால், வசந்த் காதலை கைவிட மறுத்ததால் ஆத்திரமடைந்த நாராயண செட்டி, தனது சொந்த கிராமமான காண்டரப்பள்ளிக்கு திங்கள்கிழமை வசந்தை அழைத்துச் சென்று கொலை செய்தாா். பின்னா் அவா் பேரிகை காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.
Advertisement
விசாரணையில், நாராயண செட்டியின் மனைவி சரஸ்வதி (40), உறவினரான பெங்களூரு, பொம்மனஹள்ளியை அடுத்த கரியபாளையத்தைச் சோ்ந்த தொழிலதிபா் ராமச்சந்திரன் (52), அவரது மகன் மணிகண்டன்( 25) ஆகியோா் கொலைக்கு உடந்தையாக இருந்தது தெரிந்தது. இதையடுத்து, அவா்கள் மூன்று பேரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.