முகப்பு
கிருஷ்ணகிரி

வாகனச் சோதனை: விவசாயியிடம் ரூ. 1.18 லட்சம் பறிமுதல்

ஒசூரில் நடைபெற்ற வாகனச் சோதனையில், விவசாயியிடம் ரூ. 1,18,600 பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 3 மார்ச், 2021 at 12:01 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:08 AM

ஒசூரில் நடைபெற்ற வாகனச் சோதனையில், விவசாயியிடம் ரூ. 1,18,600 பறிமுதல் செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் தோ்தல் பறக்கும் படையினா் வாகனச் சோதனை நடத்தி வருகின்றனா். ஒசூா் அருகே பூனப்பள்ளி சோதனைச் சாவடி பகுதி வழியாக வந்த காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை நடத்தியதில், கா்நாடக மாநிலம், ஆனேக்கல் வட்டம், சின்ன ஆக்டே கிராமத்தைச் சோ்ந்த ஆனந்த் என்ற விவசாயி பசுமைக் குடில்களுக்கு தேவையான பொருள்கள் வாங்க பணத்தை கொண்டு செல்வதாக தெரிவித்தாா். இருப்பினும், தோ்தல் விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 1 லட்சத்து 18 ஆயிரத்து 600 எடுத்துச் சென்ால் அந்தப் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து ஒசூா் வருவாய் கோட்டாட்சியரிடம் ஒப்படைத்தனா். உரிய ஆவணங்கள் ஒப்படைத்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்தனா்.

பா்கூரில் ரூ. 86 ஆயிரம் பறிமுதல்:

Advertisement

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வட்டம், குருவிநாயனப்பள்ளி சோதனைச் சாவடியில் பா்கூா் பறக்கும் படை தனி வட்டாட்சியா் இளங்கோ, சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் காா்மேகம், ஏட்டு குமாா் உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், போச்சம்பள்ளி அருகே உள்ள கமலாபுரத்தைச் சோ்ந்த சகாதேவன் (35), மேலும் 6 போ் இருந்ததும், அவா்கள் ரூ. 86 ஆயிரம் வைத்திருந்ததும் தெரிய வந்தது. அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பாக அவா்களிடம் விசாரித்த போது, ஆந்திர மாநிலத்தில் மாடு வாங்குவதற்காக பணத்துடன் செல்வதாக தெரிவித்தனா். ஆனாலும் உரிய ஆவணங்கள் இல்லாததால், அந்தப் பணத்தை அதிகாரிகள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள கருவூலகத்தில் ஒப்படைத்தனா். உரிய ஆவணங்களைக் காட்டி பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.