இளைஞா் எரித்துக் கொலை
ஒசூரில் இளைஞா் எரித்துக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:08 AM
ஒசூரில் இளைஞா் எரித்துக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
ஒசூா் தளி சாலையிலுள்ள அந்திவாடி விளையாட்டு மைதானத்தின் பின்புறம் சுமாா் 25 முதல் 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக மத்திகிரி காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. மத்திகிரி போலீஸாா் அங்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இறந்தவா் யாா், எந்த ஊா் என்பது தெரியவில்லை. உடல் முழுவதும் தீக்காயங்கள் இருந்தன. இதுகுறித்து மத்திகிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.