முதல்வர் ஸ்டாலின் பெண்களை அவமதிக்கிறார்: ரோகா குப்தா!
பிக்கி ஃபுளோ மகளிர் அமைப்பின் சார்பில் நடைபெற்ற கலந்துரையாடலில் தில்லி முதல்வர் பங்கேற்பு..
பெண்கள் அதிகாரமளித்தல் குறித்து கோவையில் பிக்கி ஃபுளோ மகளிர் அமைப்பின் சார்பில் நடைபெற்ற கலந்துரையாடலில் தில்லி முதல்வர் ரேகா குப்தா பங்கேற்றார்.
இந்தியத் தொழில் வர்த்தக சபையின் மகளிர் அமைப்பான பிக்கி ஃபுளோ சார்பில் கோவையில் தி ரெசிடென்சி டவர் ஹோட்டலில் இன்று பெண்கள் அதிகாரமளித்தல் மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்த பிரத்யேக கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் தில்லி முதல்வர் ரேகா குப்தா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
இவரை பிக்கி ஃபுளோ அமைப்பின் கோவை கிளை நிர்வாகிகள், வரவேற்றனர். நாட்டின் முதன்மை வர்த்தக சபையான எஃப்ஐசிசிஐ-யின் மகளிர் பிரிவாக செயல்படும் ஃபுளோ (எஃப்ஐசிசிஐ மகளிர் அமைப்பு), நாடு முழுவதும் 22 கிளைகளில் 14,000-க்கும் மேற்பட்ட பெண் தொழில்முனைவோர் மற்றும் வணிகத் தலைவர்களை இணைக்கும் பெரிய அமைப்பாக உள்ளது. இதன் கோவை கிளை, இந்த ஆண்டு பர்னிகா குப்தாவின் தலைமையில், பெண்களின் வணிக முன்னேற்றத்திற்காகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
Advertisement
பெண்கள் மேம்பாடு, பொருளாதார வளர்ச்சி மற்றும் இந்தியாவின் எதிர்காலப் பாதை குறித்து நடைபெற்ற இந்த சிறப்புக் கலந்துரையாடலில், ரேகா குப்தா பங்கேற்று தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். மேலும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் முக்கிய பிரமுகர்களும் இதில் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கூறியது,
நவீன இந்தியாவில் பெண்களின் அதிகாரமளித்தல், பொருளாதார வளர்ச்சியில் பெண் தொழில்முனைவோரின் பங்கு, பெண்கள் தலைமையிலான நிறுவனங்களுக்கு உள்ள கொள்கை வாய்ப்புகள் போன்ற முக்கிய அம்சங்கள் குறித்து இந்த கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டது. ரேகா குப்தா, பொதுச் சேவையிலும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகள் பாதுகாப்பிலும் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்கியவர்.
அவரது தலைமையிலான ஆட்சி வெளிப்படைத்தன்மை, பெண்கள் அதிகாரமளித்தல் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றை மையமாகக் கொண்டுள்ளது. வணிகம், கொள்கை மற்றும் சமூகத் தளங்களில் பெண்களின் குரலை வலுப்படுத்தும் தளங்களை உருவாக்குவதில் பிக்கி ஃபுளோ கோவை தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதை இந்த நிகழ்வு மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
தில்லி முதல்வர் ரேகா குப்தா கோயில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
அனைத்து பெண்களும் இந்த தருணத்தில் முதல்வருக்கு எதிராகக் குரலை உயர்த்த வேண்டும். முதல்வர் ஸ்டாலின் பெண்களை அவமதிக்கிறார். திருச்சியில் 8000 கூப்பன் விவகாரத்தில் பெண் திமுக உயிரிழந்துள்ளார். இந்த அரசு பாதுகாப்பற்ற அரசு தொகுதி மறுவரையறைக்கு கருப்புக்கொடி போராட்டம் மேற்கொள்கின்றார்கள். அது பெண்களுக்குச் சாதகமான ஒன்றுதான். இவர்கள் பெண்கள் முன்னேற வேண்டாம் என்று நினைக்கிறார்கள். திமுகவினரின் உதயசூரியன் சின்னம் என்பது அஸ்தமனமாகக் கூடியது முதல்வர் பெண்களுக்கு எதிரானவர் என ஆவேசமாகப் பேசினார்.