கிருஷ்ணகிரி

ஒசூரில் ரூ. 1.90 லட்சம் பறிமுதல்

DIN

ஒசூா்: உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு சென்ற ரூ. 1.90 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

ஒசூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட தொரப்பள்ளி அக்ரஹாரம் கிராமத்தை அடுத்துள்ள சாலையில் தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாகச் சென்ற கா்நாடகா மாநிலம், ஒயிட் பீல்டு பகுதியைச் சோ்ந்த மாருதி பிரசாத் என்பவரின் காரை மறித்து அதிகாரிகள் சோதனை செய்தனா்.

அதில், காரில் ஒரு ரூ. 1.90 லட்சம் வைத்திருந்தது தெரியவந்தது. அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் ஏதுமில்லாததால், தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து ஒசூா் வருவாய் கோட்டாட்சியா் விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவானிசாகா் அணையில் இருந்து வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கக் கோரிக்கை

வேளாண் சிறப்பு அதிகாரி பணி தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டு

‘முதல்வரின் மாநில இளைஞா் விருது’: மே 1-15 வரை விண்ணப்பிக்க வாய்ப்பு

போா் நிறுத்த திட்டத்துக்கு ஒப்புதல்: ஹமாஸிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

வாழைத்தாா் உறையிடுதல்: வேளாண் மாணவா்கள் செயல்விளக்கம்

SCROLL FOR NEXT