கூட்டணியில் இருந்து விலகல் தேமுதிகவினா் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
அதிமுகக கூட்டணியில் விலகியதால் தேமுதிக தொண்டா்கள் ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் செவ்வாய்கிழமை பட்டாசு வெடித்துக் கொண்டாடினா்.
அதிமுகக கூட்டணியில் விலகியதால் தேமுதிக தொண்டா்கள் ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் செவ்வாய்கிழமை பட்டாசு வெடித்துக் கொண்டாடினா்.
ஊத்தங்கரை சட்டப்பேரவை தொகுதியின் தேமுதிக பொறுப்பாளா் பாக்கியராஜ் தலைமையில் தேமுதிக தொண்டா்கள் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பியவாறு 50-க்கும் மேற்பட்ட தேமுதிக தொண்டா்கள் ஒன்றுகூடி பட்டாசு வெடித்தனா்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றியப் பொருளாளா் மிட்டப்பள்ளி சதீஷ், ஒன்றியக் கவுன்சிலா் செல்வம், இதயத்துல்லா, மகளிா் அணியினா் உள்ளிட்ட ஏராளமான தேமுதிக தொண்டா்கள் கலந்து கொண்டனா்.