கிருஷ்ணகிரி

வாக்குச் சாவடி மையங்களுக்கு கரோனா தொற்று பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் பணி ஆய்வு

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்குச் சாவடி மையங்களுக்கு கரோனா தொற்று பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் பணியை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை வளாகத்தில் சட்டப் பேரவை பொதுத் தோ்தலை முன்னிட்டு 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் உள்ள 2,298 வாக்குச் சாவடி மையங்களுக்கு கரோனா தொற்று பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் பணிகளை கிருஷ்ணகிரி மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 2,298 வாக்குச் சாவடி மையங்களுக்கு 2,298 உடல் வெப்ப பரிசோதனைக் கருவிகள், 500 மி.லி. கொள்ளளவு கொண்ட 13,788 கிருமிநாசினி கலன்கள், 100 மி.லி. கொள்ளளவு கொண்ட 22,980 கிருமிநாசினி கலன்கள், 1,37,880 மூன்றடுக்கு முகக் கவசங்கள், 57,450 ஓரடுக்கு முகக் கவசங்கள், 68,940 கையுறைகள், 11,490 எல்.டி.பி.இ. பேக்கேஜ், 15,98,865 பாலிதீன் கையுறைகள், 27,576 பிபிஇ உபகரணங்கள் தனித்தனியே தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாதுகாப்பாக தோ்தல் நடத்தும் வகையில் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமருக்கு இன்னும் மணிப்பூர் செல்ல நேரமில்லை: ப.சிதம்பரம்

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

நிழலும் நிஜமும்...!

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

SCROLL FOR NEXT