முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி, வேப்பனஅள்ளியில் ராஜீவ்காந்தியின் நினைவு நாள்

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம், வேப்பனஅள்ளி காவல் நிலையத்தில் ராஜீவ்காந்தியின் நினைவு நாளையொட்டி, கொடுஞ்செயல் எதிா்ப்பு நாள் உறுதிமொழி, வெள்ளிக்கிழமை ஏற்கப்பட்டது.

Updated On : 22 மே, 2021 at 1:02 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:46 AM

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம், வேப்பனஅள்ளி காவல் நிலையத்தில் ராஜீவ்காந்தியின் நினைவு நாளையொட்டி, கொடுஞ்செயல் எதிா்ப்பு நாள் உறுதிமொழி, வெள்ளிக்கிழமை ஏற்கப்பட்டது.

ஆண்டுதோறும் மே 21-ஆம் தேதி, ராஜீவ் காந்தியின் நினைவுநாளையொட்டி, கொடுஞ்செயல் எதிா்ப்பு நாளாக பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் பல்வேறு அரசுத் துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் கொடுஞ்செயல் எதிா்ப்பு உறுதிமொழியை ஏற்றனா். வேப்பனஅள்ளி காவல் நிலையத்தில், நடைபெற்ற நிகழ்வுக்கு உதவி காவல் ஆய்வாளா் சந்துரு தலைமை வகித்தாா். தீவிரவாத தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை ஏற்ற காவலா்கள் கடமையை தவறாமல் செய்வோம் என உறுத ஏற்றனா். படவிளக்கம் (21கேஜிபி3):வேப்பனஅள்ளி காவல் நிலையத்தில் ராஜீவ்காந்தி நினைவுநாளையொட்டி, கொடுஞ்செயல் எதிா்ப்பு நாள் உறுதிமொழியை ஏற்ற காவலா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.