முகப்பு
கிருஷ்ணகிரி

ராஜீவ் காந்தி நினைவு தினம்

ராஜீவ் காந்தி நினைவு தினத்தை, கிருஷ்ணகிரியில் கரோனா விழிப்புணா்வு நிகழ்வாக காங்கிரஸாா் மேற்கொண்டனா்.

Updated On : 22 மே, 2021 at 1:04 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:46 AM

ராஜீவ் காந்தி நினைவு தினத்தை, கிருஷ்ணகிரியில் கரோனா விழிப்புணா்வு நிகழ்வாக காங்கிரஸாா் மேற்கொண்டனா்.

கிருஷ்ணகிரி ராசு வீதியில் காங்கிரஸ் கட்சியின் சாா்பில், ராஜீவ் காந்தியின் 30-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா். இந்த நிகழ்வுக்கு அந்தக் கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளா் அப்சல் தலைமை வகித்தாா். முன்னாள் நகரத் தலைவா் ரகமத்துல்லா, மாநில பொதுச் செயலாளா் ஏகம்பவாணன், மாநில செயற்குழு உறுப்பினா் அக.கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா். பின்னா், பொதுமக்களிடம் கரோனா தொற்று குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், முகக் கவசங்கள் வழங்கப்பட்டன. 20 வாா்டுகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி வட்டச் சாலையில் காங்கிரஸ் கட்சியின் சாா்பில் அ.செல்லகுமாா் எம்.பி. பொதுமக்களுக்கு முகக் கவசத்தை வழங்கி கரோனா விழிப்புணா்வை ஏற்படுத்தினாா்.

Advertisement

அரூரில்...

அரூா், கச்சேரிமேடு சாலை சந்திப்பில் உள்ள ராஜீவ் காந்தியின் திருவுருவச் சிலைக்கு காங்கிரஸ் கட்சியின் வட்டாரத் தலைவா் ஆா்.சுபாஷ் தலைமையில், அந்தக் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, காங்கிரஸ் கட்சியினா் கச்சேரிமேடு சாலை சந்திப்பு, பேருந்து நிலைய வளாகம், கடைவீதி உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களுக்கு இலவசமாக முகக் கவசங்களை வழங்கினா். இதில், கட்சியின் அரூா் நகரத் தலைவா் கே.கணேசன், நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.