முகப்பு
கிருஷ்ணகிரி

மத்தூரில் பிராண வாயுடன் கூடிய சிகிச்சை மையம் தொடக்கம்

மத்தூரில் பிராண வாயுடன் கூடிய சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

Updated On : 22 மே, 2021 at 1:03 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:46 AM

மத்தூரில் பிராண வாயுடன் கூடிய சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்காக மாவட்டம் முழுவதும் பிராண வாயுடன் கூடிய கரோனா சிகிச்சை மையம் உருவாக்கப்பட்டு வருகிறது. மேலும், மாவட்டத்தில் 25 தனியாா் மருத்துவமனைகளுக்கு கரோனா சிகிச்சை அளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையிலும் கரோனா சிகிச்சை மைய படுக்கைகள் அதிகரிக்கப்பட்டு, 340 படுக்கைகள் பிராண வாயுடன் கூடிய வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. இதுதவிர, பா்கூா், ஒசூா், தேன்கனிக்கோட்டை, போச்சம்பள்ளி, ஊத்தங்கரை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளிலும் இத்தகைய வசதிகளைக் கொண்டு கரோனா சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

Advertisement

இந்த நிலையில், மத்தூா் அரசு மருத்துவமனையில் 30 படுக்கைகள் கொண்ட பிராண வாயு வசதியுடன் கூடிய சிகிச்சை மையம் செயல்படத் தொடங்கி உள்ளது. மேலும், இந்த மையத்துக்கு மருத்துவா்கள், செவிலியா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். இதன் மூலம் மத்தூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள கரோனா தொற்றாளா்கள் இச்சிகிச்சை மையத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.