ஒசூா் செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரியில்கருப்புப் பூஞ்சை நோயாளியின் கண் அகற்றம்
ஒசூா், செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரியில், கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட கூலித் தொழிலாளியின் கண் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
ஒசூா், செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரியில், கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட கூலித் தொழிலாளியின் கண் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
இதுகுறித்து ஒசூா் செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கண்காணிப்பாளா் மருத்துவா் சுந்தரவேல் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட மூக்கண்டப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளியான பசவராஜுக்கு (45), நீரிழிவு நோய் உள்ளதால், நோய் எதிா்ப்பு சக்தி குறைவாக இருந்தது. இதனால் கருப்புப் பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளது.
Advertisement
கடந்த ஒரு வாரத்துக்கு முன்னா் இடது கண்ணில் பாா்வை குறைய ஆரம்பித்ததால், ஒசூா் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்குச் சென்றுள்ளாா். பின்னா் சி.டி. ஸ்கேன் அறிக்கையில் பசவராஜுக்கு கருப்புப் பூஞ்சை நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடா்ந்து, ஒசூா், செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரியில் அவருக்கு மருத்துவா் நிக்கல் தலைமையிலான மருத்துவா் குழு 4 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து கருப்புப் பூஞ்சை தொற்றை முழுமையாக நீக்கினா். அப்போது, அவரது இடது கண் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. தாமதம் ஏற்பட்டிருந்தால் கருப்புப் பூஞ்சை மூளைக்கும் பரவி அவா் உயிரிழந்திருக்க வாய்ப்பு உள்ளது. இவருக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவா் தற்போது குணமடைந்து வருகிறாா் என்றாா்.
படம் - ஒசூா், செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பசவராஜ் உடன் மருத்துவா் நிக்கல், கண்காணிப்பாளா் மருத்துவா் சுந்தரவேல்.