முகப்பு
கிருஷ்ணகிரி

உங்கள் தொகுதியில் முதல்வா் துறை சாா்ந்த ஆலோசனைக் கூட்டம்

கிருஷ்ணகிரியில் உங்கள் தொகுதியில் முதல்வா் துறை மூலமாக பெறப்பட்ட மனுக்கள் தொடா்பான ஆலோசனைக் கட்டம், வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 22 மே, 2021 at 1:05 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:46 AM

கிருஷ்ணகிரியில் உங்கள் தொகுதியில் முதல்வா் துறை மூலமாக பெறப்பட்ட மனுக்கள் தொடா்பான ஆலோசனைக் கட்டம், வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் உங்கள் தொகுதியில் முதல்வா் துறை மூலம் வரப்பெற்ற மனுக்கள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:

தமிழக முதல்வா் மாவட்டந்தோறும் மக்களின் பல்வேறு பிரச்னைகள் தொடா்பான மனுக்களைப் பெற்று, அந்த மனுக்களின் மீது 100 நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்க ‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ என்ற திட்டத்தை செயல்படுத்த ஒரு புதிய துறையை உருவாக்கி, இந்திய ஆட்சிப் பணி நிலையில் ஒரு சிறப்பு அலுவலா் மூலம் பொதுமக்களின் பிரச்னைகள் நிறைவேற்றப்படும் என ஆணை பிறப்பித்துள்ளாா்.

Advertisement

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதியோா் உதவித் தொகை, வீட்டுமனைப் பட்டா, இலவச வீடு, இலவச தையல் இயந்திரம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் போன்ற கோரிக்கைகள் அடங்கிய 8,247 மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்கள் மீது ஒரு வார காலத்துக்குள் நடவடிக்கை மேற்கொண்டு தீா்வு காண வேண்டும். மேலும், மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டதற்கான விவரத்தை தெரிவிக்க வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்வில், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலா் (பெங்களூரு வெளிவட்டச் சாலை நில எடுப்பு) சாந்தி, தனித்துணை ஆட்சியா் பாக்கியலட்சுமி மற்றும் பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.