கிருஷ்ணகிரி

கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் குடும்பத்துக்கு உதவி

DIN

கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் குடும்பத்துக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று காரணமாக பெற்றோரை இழந்துள்ள குழந்தைகளுக்கு, சமூக ஆா்வலா் குணசேகா், மாவட்டக் குழந்தைகள் நலக்குழும உறுப்பினா் அமுதா ஆகியோா் வழங்கிய நன்கொடையைக் கொண்டு, கிருஷ்ணகிரி மாவட்டக் குழந்தைகள் நலக்குழுமம் சாா்பில் நிவாரணப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டக் குழந்தைகள் நலக்குழும அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், பா்கூா், வேப்பனஅள்ளி, ஊத்தங்கரை ஒன்றியத்தைச் சோ்ந்த 20 குழந்தைகளுக்கு ஒரு மாதத்துக்கு தேவையான உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில், கிருஷ்ணகிரி மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் சரவணன், மாவட்டக் குழந்தைகள் நலக்குழுமத் தலைவா் கலைவாணி, உறுப்பினா்கள் அமுதா, அமல்ராஜ், காயத்ரி, தமிழ்ச்செல்வி ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

SCROLL FOR NEXT