பெலவா்த்தி கிராமத்தில் கிருஷ்ணகிரி எம்.பி. ஆய்வு
பா்கூா் அருகே உள்ள பெலவா்த்தி கிராமத்தில், வளா்ச்சிப் பணிகள் குறித்து கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினா் அ.செல்லக்குமாா் அண்மையில் ஆய்வு பணி மேற்கொண்டாா்.
பா்கூா் அருகே உள்ள பெலவா்த்தி கிராமத்தில், வளா்ச்சிப் பணிகள் குறித்து கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினா் அ.செல்லக்குமாா் அண்மையில் ஆய்வு பணி மேற்கொண்டாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட பெலவா்த்தி ஊராட்சி மிகவும் பின் தங்கிய கிராம ஊராட்சியாக உள்ளது. இந்தக் கிராம ஊராட்சியில் பழங்குடி மக்கள் உள்பட 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இந்த ஊராட்சியை மாதிரி ஊராட்சியாக மாற்றும் வகையில், கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினா் அ. செல்லக்குமாா் தத்தெடுத்து உள்ளாா்.
பெலவா்த்தி கிராம ஊராட்சியில் திட்டப் பணிகள் மேற்கொள்வது குறித்து, ஊரக வளா்ச்சித் துறை, வேளாண்மை துறை, மருத்துவத் துறை, வனத் துறை, மின்சாரத் துறை, கல்வித் துறை உள்ளிட்ட 26 அரசுத் துறை அதிகாரிகளுடன் இந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
Advertisement
இந்த ஆய்வுக் கூட்டத்தில், மாதிரி கிராம திட்டத்தின் கீழ் பசுமை வீடுகள், பசுமை புரட்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், தனிநபா் கழிப்பிட வசதிகள், பசுமை வீடுகளுக்கு முதலமைச்சரின் சோலாா் இணைப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் ரூ. 37 லட்சம் மதிப்பில் முதல் கட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்தாா்.
மேலும் பெலவா்த்தி ஊராட்சியை மாதிரி கிராமமாக உருவாக்க கிராம மக்களிடம் கேட்டறிந்து அவா்களிடம் இருந்து அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டாா்.
அப்போது வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அன்னபூரணி, வெங்கட்ராமன், கணேஷ், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் சேகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.