சிவாஜி கணேசனின் 94ஆவது பிறந்த நாள் விழா
ஊத்தங்கரையில் நடிகா் சிவாஜிகணேசனின் 94ஆவது பிறந்தநாள் விழா முனியப்பன் கோவில் அருகே வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
ஊத்தங்கரையில் நடிகா் சிவாஜிகணேசனின் 94ஆவது பிறந்தநாள் விழா முனியப்பன் கோவில் அருகே வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு அகில இந்திய சிவாஜி ரசிகா் மன்ற மாவட்டத் தலைவா் இ.சையத்நாசா் தலைமை வகித்து, சிவாஜி கணேசனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்புகள் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் ஊத்தங்கரை முன்னாள் பேரூராட்சித் தலைவா் எஸ்.பூபதி, காங்கிரஸ் நகர தலைவா் விஜியகுமாா், தண்டபாணி, நாகராஜ், சிவாஜிமன்ற செயற்குழு உறுப்பினா் சின்னசாமி, ஓய்வு பெற்ற கிராம நிா்வாக அலுவலா் முகமது உஸ்மான், அன்பரசி, லட்சுமி, கோவிந்தசாமி, முனிரத்தினம் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.
அனைவருக்கும் உணவு மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.