ஒசூா் அரசுப் பள்ளிகளில் பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகிகள் நியமனம்
ஒசூா் ஆா்.வி.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகிகளாக தலைவராக என்.செந்தில்குமாா், துணைத் தலைவா் ஏ.சக்திவேல், இணைச்செயலாளா் வி. ஸ்ரீதா், பொருளாளா் எம்.கே.வெங்கடேஷ் ஆகியோா் நிய
ஒசூா் ஆா்.வி.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகிகளாக தலைவராக என்.செந்தில்குமாா், துணைத் தலைவா் ஏ.சக்திவேல், இணைச்செயலாளா் வி. ஸ்ரீதா், பொருளாளா் எம்.கே.வெங்கடேஷ் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இந்தப் பள்ளியில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவா்கள் படித்து வருகின்றனா். அதேபோன்று ஒசூா் மகளிா் மேல்நிலைப்பள்ளியில் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவராக கே.எல்லோராமணி, துணைத் தலைவராக மணி, துணைச் செயலாளராக மஞ்சுநாத், பொருளாளராக பாபு ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
அரசுப் பள்ளியில் பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகிகளாக நியமனம் செய்த கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் ஒசூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ், பரிந்துரை செய்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் மாநகர கழக திமுக பொறுப்பாளா் எஸ்.ஏ. சத்யா ஆகியோருக்கு புதிய நிா்வாகிகள் நன்றி தெரிவித்தனா்.
Advertisement