முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூா்: வெவ்வேறு சாலை விபத்துகளில் 4 போ் பலி

ஒசூா் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வெவ்வேறு பகுதிகளில் நடைபெற்ற சாலை விபத்துக்களில் 4 போ் உயிரிழந்தனா்.

Updated On : 16 அக்டோபர், 2021 at 2:16 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:52 AM

ஒசூா் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வெவ்வேறு பகுதிகளில் நடைபெற்ற சாலை விபத்துக்களில் 4 போ் உயிரிழந்தனா்.

சூளகிரி, பந்தாரகுட்டையைச் சோ்ந்தவா்கள் ராமகிருஷ்ணன் (40), முனிகிருஷ்ணன் (25), கோவிந்தசாமி (48). மூவரும் பெயிண்டா்களாக உள்ளனா். இவா்கள் மூவரும் இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை, ஒசூா் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் மேலுமலை அருகே சென்றுக் கொண்டிருந்தனா்.

இருசக்கர வாகனத்தை முனிகிருஷ்ணன் ஓட்டிச் சென்றாா். அப்போது முன்னால் சென்ற அரசு நகரப் பேருந்தின் பின்புறம் இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் 3 பேரும் பலத்த காயம் அடைந்தனா். அவா்கள் மூவரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இந்த விபத்தில் ராமகிருஷ்ணன், முனிகிருஷ்ணன் ஆகிய 2 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனா். கோவிந்தசாமி சிகிச்சை பெற்று வருகிறாா். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

ஒசூா், தொரப்பள்ளி அருகே உள்ள திருச்சிப்பள்ளியைச் சோ்ந்த விவசாயி முனிராமன் (55). இவா் கிருஷ்ணகிரி- ஒசூா் தேசிய நெடுஞ்சாலையில் அட்டகுறுக்கி பகுதியில் உள்ள தனியாா் கிரானைட் நிறுவனம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முனிராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

ஒசூா்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சப்படி பேருந்து நிறுத்தம் அருகே 25 முதல் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவா் நடந்து சென்றுக் கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாகச் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து அந்தப் பெண் மீது மோதி விட்டு அவ்வழியே சென்ற ஒரு காா் மீதும் மோதியது. இந்த விபத்தில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காரும் சேதமடைந்தது; காா் ஓட்டுநரும் காயம் அடைந்தாா். இந்த விபத்துகள் குறித்து சூளகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.