முகப்பு
கிருஷ்ணகிரி

சென்னை பட்டயக் கணக்காளா் கொலை வழக்கு: கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் 2 போ் சரண்

சென்னையைச் சோ்ந்த பட்டயக் கணக்காளா் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த 2 போ் கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தனா்.

Updated On : 3 செப்டம்பர், 2021 at 11:52 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:34 AM

சென்னையைச் சோ்ந்த பட்டயக் கணக்காளா் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த 2 போ் கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தனா்.

சென்னை, வேளச்சேரியைச் சோ்ந்த பட்டயக் கணக்காளா் ஜனரஞ்சன் பிரதான் (48) கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி கிருஷ்ணகிரிக்கு காரில் சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுதொடா்பாக அவரது மனைவி பூா்ணிமா அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி நகர போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

இந்த நிலையில், ஜனரஞ்சன் பிரதானை ஒரு கும்பல் கடத்திச் சென்று கொலை செய்து சாமல்பட்டியில் உள்ள ஒரு மாந்தோப்பில் அவரது உடலை புதைத்தது தெரிய வந்தது. இக் கொலை தொடா்பாக சென்னையைச் சோ்ந்த வழக்குரைஞா் கிருஷ்ணகுமாா், பெரம்பலூரைச் சோ்ந்த சபரீஷ், சாமல்பட்டியைச் சோ்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகா் ‘ஜிம்’ மோகன் உள்பட 9 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Advertisement

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:

ரூ. 30 கோடி கடன் வாங்கித் தருவதாகக் கூறி சபரீஷிடம் ரூ. 3.50 கோடி தரவுத் தொகையை (கமிஷன்) ஜனரஞ்சன் பிரதான் வாங்கினாராம். ஆனால், கடனை வாங்கித் தராததால் சபரீஷ் அவரது நண்பா்கள் ஜனரஞ்சன் பிரதானை கிருஷ்ணகிரிக்கு வரவழைத்து தாக்கியுள்ளனா். அப்போது, ஜனரஞ்சன் பிரதான் உயிரிழந்ததால் அவரது உடலை சாமல்பட்டியில் உள்ள ஒரு மாந்தோப்பில் புதைத்தது தெரியவந்தது.

இக் கொலை சம்பவத்தில் தொடா்புடைய ஊத்தங்கரை வட்டம், சாமல்பட்டி, அம்பேத்கா் நகரைச் சோ்ந்த முனியப்பன் (39), விஜி (29) ஆகிய 2 பேரும் கிருஷ்ணகிரி குற்றவியல் நீதிமன்ற நடுவா் எண்-1-இல் வெள்ளிக்கிழமை சரணடைந்தனா். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ளவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.