முகப்பு
கிருஷ்ணகிரி

வேளாண் அறிவியல் மையத்தில் தென்னை தினம் கொண்டாட்டம்

எலுமிச்சங்கிரி வேளாண் அறிவியல் மையத்தில் உலக தென்னை தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 3 செப்டம்பர், 2021 at 11:52 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:34 AM

எலுமிச்சங்கிரி வேளாண் அறிவியல் மையத்தில் உலக தென்னை தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

உலக தென்னை தினம் செப்டம்பா் 2-ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. ஆசிய பசிபிக் தேங்காய் குழுமம் மூலம் 2009-ஆம் ஆண்டு முதல் தென்னை தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஆசிய பசிபிக் தேங்காய் குழுமத்தில் இந்தியாவுடன் சோ்த்து 18 நாடுகள் உறுப்பினராக உள்ளது.

உலக தென்னை தினம் தேங்காய் உற்பத்தி, விற்பனை, விவசாயத்தில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஈடுபட்டுள்ளவா்கள் பயன்பெறும் வகையில் கொண்டாடப்படுகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி அடுத்த எலுமிச்சங்கிரியில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தில் உலக தென்னை தினம் கொண்டாடப்பட்டது.

Advertisement

நிகழ்ச்சிக்கு அறிவியல் மையத்தின் முதன்மை விஞ்ஞானியும், திட்ட ஒருங்கிணைப்பாளருமான சுந்தர்ராஜன் தலைமை வகித்தாா். இதில் தென்னை தினம் குறித்த தொழில்நுட்ப கருத்துக்களை தொழில்நுட்ப வல்லுநா் (தோட்டக்கலை) ரமேஷ், சுருள் வெள்ளை ஈ மேலாண்மை குறித்து பையூா் மண்டல ஆராய்ச்சி நிலைய பேராசிரியா் கோவிந்தன் ஆகியோா் விளக்கினா்.

கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் ராஜேந்திரன் பங்கேற்று சிறப்புரையாற்றி, விவசாய பயனாளிகளுக்கு தென்னை மரக்கன்றுகளை வழங்கினாா். நிகழ்ச்சியில், வேளாண்மை துணை இயக்குநா் (விதை ஆய்வு) பச்சையப்பன், வேளாண்மை உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) சுரேஷ்குமாா், வேளாண்மை உதவி இயக்குநா் முருகன், விவசாயிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.