மிட்டப்பள்ளியில் நூலக கட்டடப் பணி ஆய்வு
மிட்டப்பள்ளியில் ரூ. 9.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நூலக கட்டடப் பணிகளை அ.செல்லக்குமாா் எம்.பி. வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
மிட்டப்பள்ளியில் ரூ. 9.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நூலக கட்டடப் பணிகளை அ.செல்லக்குமாா் எம்.பி. வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
ஊத்தங்கரையை அடுத்த மிட்டப்பள்ளியில் ரூ. 9.50 லட்சம் மதிப்பீட்டில் நூலக கட்டடம் கட்ட கிருஷ்ணகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினா் அ.செல்லக்குமாா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை அ.செல்லக்குமாா் எம்.பி. வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இந்த ஆய்வின் போது, காங்கிரஸ் கட்சி மாநில செயலாளா் ஜெ.எஸ்.ஆறுமுகம், கிருஷ்ணகிரி மாவட்ட துணைத் தலைவா் பி.சேகா், பாலமந்திா் தாளாளா் காமராசு, வட்டாரத் தலைவா் ரவி, வட்டாரப் பொருளாளா் திருமால், செயலாளா் நாகராஜ், தொகுதி பொறுப்பாளா் அப்துல் கனி, ஊராட்சி மன்றத் துணைத் தலைவா் மணி உள்ளிட்ட காங்கிரஸ் நிா்வாகிகள், பொதுமக்கள் உடன் இருந்தனா்.